இன்றைய கண்டுபிடிப்பு ….
——————–
நகைச்சுவையும் ….சிந்தனையும் …..
***************
கணவன் ..கடவுளிடம் என்ன வேண்டிக் கொண்டாய் ?.
மனைவி …ஏழு ஜென்மத்திற்கும் நீங்கள்தான் என் கணவராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் . நீங்கள் கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்ள போகிறீர்கள் ?
கணவன் . இதுதான் என்னுடைய ஏழாவது ஜென்மம் ஆக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள போகிறேன் ..
மனைவி ..?????
———————
முடிந்தால் முயற்சிக்கிறேன் என்பது முயற்சி அல்ல ..
முடியும் வரை முயற்சிக்கிறேன் என்பதுதான் முயற்சி..
—————————
முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான் இது முதுமொழி ….
ஆய்வு செய்ததில் கிடைத்த அர்த்தங்கள் …
1.முருங்கையை நட்டு முருங்கையை சாப்பிடுவதால் வயதாகி போனாலும் ஊன்றுகோல் இன்றி மனிதன் நடப்பான்.
2. முருங்கையை பயிர்செய்து கைகளால் தூக்கிக் கொண்டு சந்தைக்கு செல்பவன் அதனை இலகுவாக விற்றுத் தீர்த்துவிட்டு கையில் சுமையே இல்லாமல் வெறுங்கையோடு நடந்து வருவான்.
கருத்து:: முருங்கைக்காய் ,முருங்கைக் கீரை ஆகியவை மிகச்சிறந்த சத்தான பொருட்கள் .
ஆகவே வெகு சீக்கிரம் சந்தையில் விற்று விடும் .
————————–
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுகை நகைச்சுவை மன்றம் 19.03.21.