நகைச்சுவை-Humour

இன்றைய கண்டுபிடிப்பு …12.04.21

இன்றைய கண்டுபிடிப்பு …12.04.21
அதிரடி மாற்றங்கள் ………..
வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் போதும்..
முடித்துக் கொண்டு வந்த பிறகும் நம் வீடுகளில் இருக்கும் சில பல அதிரடியான மாற்றங்கள் ………………………..
பயணத்தில் இருக்கும் பொழுது …
முட்டை அப்பம் ஊற்றி இருக்கிறேன் . மச்சான் சாப்பிடாமல் எழுந்து விடாதீர்கள் …..
முடித்துக்கொண்டு வந்த பிறகு ….
உங்களுக்கு கொழுப்பு (கொலஸ்ட்ரால் ) ஜாஸ்தி அப்பத்தில் முட்டை என்கிற பேச்சையே பேசாதீர்கள்.
              ——————————————–
பயணத்தில் இருக்கும்போது ….
டீயில் சுகர் ஜாஸ்தி இருக்குமா …
அதை அப்படியே வைங்க மச்சான் வேற டீ போடுகிறேன் …
முடித்துக்கொண்டு வந்த பிறகு ……
டீயில் இனிப்பு அதிகமா இருக்குமா ….
எல்லாம் ஒழுங்காதான் இருக்கு.குடிச்சிட்டு போங்க .ஒரு நாளைக்கு கொஞ்சம் கூடுதலாக  சீனி போட்டு  குடிச்சா உசுரு போய் விடாது.
                    ——————————-
பயணத்தில் இருக்கும்போது ….
சட்டை தேய்க்க வேண்டும் அயன்பாக்ஸ் எடும்மா .
ஐயோ மச்சான் வேண்டாம் வேண்டாம் லாண்டரி கடையில் கொடுத்து அயன் செய்து கொள்ளலாம்  நீங்கள் இருங்கள் .
முடித்துக்கொண்டு வந்த பிறகு …
சட்டை தேய்க்க வேண்டும் லாண்டரிகாரருக்கு போன் செய் .
சும்மாதானே வீட்டில் இருக்கீங்க .
தேய்க்காமல் போட்டால் ஒன்றும் குறைந்து விடாது .
                     ———————————-
பயணத்தில் இருக்கும்போது …
எம்மா ரேஷன் கடையில் பொருட்கள் எல்லாம் வாங்குவியா  .இல்லையா ..?
ஏன் மச்சான் ரேஷன் கடை பொருள் எல்லாம் நம்ப சாப்பிட்டா நம்ப கௌரவம் என்ன ஆகிறது .அதனால வாங்குவதே இல்லை மச்சான் .
முடித்துக்கொண்டு வந்தபிறகு …
ஏங்க …காலையிலிருந்து என்ன வெட்டியா முறிக்கிறிங்க ..காலாகாலத்துல போயி ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வாங்க .லேட்டா போனா கோதுமை இல்ல சீனி இல்லைன்னு சொல்லுவாங்க .
                         ————————-
சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்க்கை சீராக செல்வதற்கு ஒரே வழி …
கணவன் கோபமாக திட்டினால் மனைவி  சைலன்ட்(silent)ஆகவும் ..
மனைவி கோபமாக திட்டினால்  கணவன் சைலன்ட்(silent) ஆகவும் இருந்துவிட்டால் ..
வாழ்க்கை வயலெண்ட்ஸ்(violents)இல்லாமல் சைலன்டாக(silent)போகும் …
இது பகுத்தறிவு அல்ல ….
பட்ட ….. பட்ட … பட்ட .. பட்டறிவு ….
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுகை நகைச்சுவை மன்றம் 10.04.21.

கருத்து தெரிவியுங்கள்