என் பக்கம் - Editor's Page

கனவுகளை நினைவாக்கும் வாழ்த்துக்களுடன்……..

மக்களின் இன்றைய நிலை நிம்மதியாகவும் குழப்பமாகவும் உள்ளது .

covid-19 முதல் அலை ஓய்ந்து நிம்மதியாக பெருமூச்சு விடும் நேரத்தில் இரண்டாவது அலை என்ற குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தாயகம் திரும்பிய நமது மக்கள் சிலர் தொழில் தொடங்கியுள்ளார்கள் சிலர் தொழில் தொடங்க உள்ளார்கள் தொழில் தொடங்குவதற்கு கவனிக்க வேண்டிய விஷயங்களை மதுக்கூர் டாட் காம் தொகுதியில் வெளியிட்டு இருந்தோம்.சிலர் வெளிநாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தி வருவதால் வெளிநாடு செல்லலாம் என்ற எண்ணம் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் மனதில் கொள்வோம் எந்த ஒரு தொழிலும் நமக்கு தன்னிறைவு மனதிலும் பொருளாதாரத்திலும் அடைய வேண்டுமானால் குறைந்தது நான்கு வருடம் காத்திருக்கவேண்டும். இந்த நிலையை உணர்ந்தால் மட்டுமே தொழிலில் வெற்றியடையலாம். மதுக்கூர் டாட் காம் அதைப் பற்றி கட்டுரை இந்த மாதம் சமர்ப்பித்தது… அரசியலைப் பொருத்தவரை ஒற்றுமையில் வேற்றுமை யாக உள்ளது ,  ஒரு பொதுவான  நோக்கம் இல்லை என்றால்  சில்லறை  நோக்கங்கள் அந்த நோக்கத்தை சின்னாபின்னமாகி விடும். . இதை பதவியில் உள்ளவர்கள் உணர வேண்டும் . வரும் தேர்தலின் முடிவை பற்றி நமக்கு அச்சமாகவும் குழப்பமாகவும் உள்ளது. மழைக்காலம் முடிந்து விவசாயம் செழிப்பாக உள்ளது… நமக்கு நிம்மதியாக உள்ளது. வரும் வருடம் நமது கனவுகளை நினைவாக்கும் வாழ்த்துக்களுடன் மதுக்கூர் டாட் காம் இந்த ஆண்டை நிறைவு செய்கிறது.

கருத்து தெரிவியுங்கள்