மதுக்கூர் .காம் தன் வாசகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது
மதுக்கூர் தொடர் மழையை கடந்த சில நாட்களாக சந்தித்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன, நமதூர் மக்களின் கனவான புதுக்குளம் நீர் நிரம்பி உள்ளது. அதன் வரிகால்களை சீர் செய்த சுத்தம் செய்த இயக்கங்களை பாராட்டவேண்டும். இந்தஇயக்கங்களின் சமூக சேவைகள் மதுக்கூர். காம் பக்கங்களில் பதிவு செய்துள்ளது.
கோவிட் 19 அச்சுறுத்தல் குறைந்தாலும் மக்கள், பாதுகாப்பாக இருக்க அவசியமாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்புமருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்தியாவின்பொருளாதாரம் மீண்டு வர தொடங்கியுள்ளது. உள் நாட்டைவிட வெளிநாட்டு முதலீடுகள் நமது பங்கு சந்தையில் அதிகரித்து வருகின்றது. அது இந்தியாவின் கருப்பு பனாமா என்ற சந்தேகமும் உள்ளது. அது புதிய தொழில் மூலதனமாக மாறினால் இந்திய பொருளாதாரத்திற்கு ஆரோக்கியம்.
மீண்டும் சந்திப்போம்..