என் பக்கம் - Editor's Page

நவம்பர் மாத நினைவலைகள்

சென்ற வாரம் நிவர் புயலின் பயமும் கவலையும் கலர்ந்த நாட்களாக ஓடியது. நிவர் புயலில் நமக்கு பெரிய பாதிப்பு இல்லாமல் சென்றதுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். இந்த புயலின் தாக்கத்தை பற்றி
ஜனாப் அன்வர் அவர்களின் “டி டைம் “யில் நாம் படித்தோம்.

இந்த கால மழையின் அழகை ஜனாப் கே.என்.எம் முகம்மது இஸ்மாயில் அவர்கள் தன் கவிதை மழையில் அளித்து இருந்தார். அதுவும் நமது இணையதளத்தில் கவிஞன் என்ற நெடுவரிசையில் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த புயலின் அச்சுறுத்தில், எந்த வித இக்கட்டான சூழ்நிலைகளையும் சமாளிக்க, மதுக்கூரை சேர்ந்த எஸ்.டி.பி.,ஐ, த.மு.முக, டி.என்.டி.ஜே, ம.ஜ.க., கிரெசென்ட் பிளட் டோனோர்ஸ் மற்றும் தனிப்பட்ட தன்னாலவர்களும்
தாயராக இருந்தார்கள், அவர்களின் சேவையை நாம் பாரட்டாமல் இருக்க முடியாது.


இந்த வாரத்தில் ஜனாப் M. நிஜாம் முகைதின் மாநில பொது செயலாளர் எஸ்.டி.பி.ஐ சந்திக்க நேரிட்டது. இன்றை அரசியல் சூழ்நிலைகளையும், சமுதாயதுக்கு உள்ள சவால்களையும், அதனை எதிர்கொள்ளும் எஸ்.டி.பி.ஐ யின் கொள்கைகளையும் விளக்கினார்கள். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துவோம்.

முடங்கி கிடந்த இளைஞர்களை முடுக்கிவிடும் விதமான பல விளையாட்டு போட்டிகள் மதுக்கூரில் நடைபெற்றது.
விளையாட்டு என்பது சாதி,மதம்,நிறம்,அரசியலை மறந்து முயற்ச்சி நம்பிக்கை வீரம்,மனித ஒற்றுமை,நட்பை போற்றுதல் வெற்றி தோல்வியை சமமாக பாவித்தல் போன்றவற்றை கற்றுதரும் தலம் ஆகும். அந்த மருந்தில் விஷம் கலக்கமால் இந்த முயற்ச்சிகள் வெற்றி பெறவேண்டும்.


மதுக்கூர்.காம்’இல் நமது மக்களை (தங்களை) பதிவு செய்து கொள்ள அழைக்கின்றது.பதிவு செய்த உறுப்பினர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப கட்டுரைகள்,வழிகாட்டுதல்,நேரலைகள்,கல்வி,வேலை வாய்ப்புகளை பற்றி மதுக்கூர்.காம் பகிர்ந்து கொள்ளும்.

மதுக்கூர்.காம் இன் புதிய வாட்ஸ் ஆப் குழுமத்தில் , 2005-06 ம் ஆண்டு துபாய் பார்க்கில் நடைபெற்ற ‘வாசகர் சந்திப்பை’ நினைவுட்டி உறுப்பினர் ஜனாப் முகமது சுல்தான் அவர்களுக்கு மதுக்கூர்.காம் தனது நன்றியை பகிர்ந்து கொள்கின்றது.

கருத்து தெரிவியுங்கள்