என் பக்கம் - Editor's Page

செய்தி தொற்று

நாளும் ஓர் இறப்பு செய்தி. நமது உறவினர்கள், நண்பர்கள், சமுதாய நன்மக்கள்.

இந்த நோய் பரவலை தடுக்க பல மருத்துவ முறைகளை பின்பற்றி வருகின்றோம். தடுப்பு ஊசிதான் நம்மை பாதுகாக்க கடைசி அயுதம் என்ற விழிப்புணர்ச்சி நம்மில் பலபேருக்கு வந்துள்ளது.

நோய் தொற்றால் உடல் நலம் பாதிக்கும். அதே நேரத்தில் செய்தி தொற்றால் நாம் மன நலம் பாதிக்கபட்டு வருகின்றது. வேதனை ஓன்று தான்..

இந்த செய்தி தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

கொரானா சம்பந்தப்பட்ட மருத்துவ வழிமுறைகளை தவிர மற்ற செய்திகளை மிடியாவில் படிப்பதை/பார்பதை நிறுத்தவேண்டும்.

மற்றவர்களை சந்திக்கும்பொழுதும், போனில் பேசும் பொழுதும் கொரானா பற்றிய செய்திகளையும் விசாரணைகளியும் தவிர்கவேண்டும்.

ஊடகங்களில் முலம் வருகின்ற இறப்பு செய்திகளை தவிர்க்க வேண்டும். உறவினர்கள் முலம் நாம் அறிந்துகொள்வோம் . கோவிட் காலங்களில் அடிக்கடி இறப்புகளின் அடக்கம் செய்யும்  புகைப்படம்  அதிக மன கவலைகளை  ஏற்படுத்துகிறது.

உலகம் பல உயிர் இழப்புகளை சந்தித்துள்ளது. ஸ்பானிஃஸ் புளு நோய் முலம் (1918-1920) சுமார் 17-100 மில்லியன் மக்கள் உயிர் இழந்துள்ளார்கள்.

சுமார் 25 மில்லியன் ராணுவவீரர்களும், 40 மில்லியன் சாதாரண மக்களும் 2 வது உலகப்போரின்போது உயிர் இழந்துள்ளார்கள்.

இறைவனின் இந்த சோதனையையும் நாம் கடந்து செல்வோம். இதுவும் கடந்து போகும். நம்பிக்கையுடன் இருங்கள்.

இல்லத்தில் அதிக நேரம் இறைவணக்கத்தில் செலுத்துங்கள். இறைவனின் கருணையால் இதனை வெல்வோம்.

வீடுகளில் உங்கள் எதிர்பார்பை குறைத்துக்கொள்ளுங்கள். விட்டுகொடுங்கள். விளையாடுங்கள்.

நல்ல புத்தகங்களை படிப்பதற்க்கும், நமது  திறமைகளை ON LINE முலம் வளர்த்துக்கொள்வதற்கும் இது அரிய சந்தர்ப்பம் ஆகும். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பல இயக்கங்கள், இந்த இக்கட்டான சமயத்தில் பல சமுதாய பணிகளை (Ambulance) செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு தாரளமாக பொருளாதார உதவிகளை செய்யுங்கள்.

கருத்து தெரிவியுங்கள்