கோவிட் 19 குறைந்து வருவதால் தெருக்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது .அது சமூக, பொருளாதார, கல்வி காரணமாக இருப்பது நமது சமுதாயத்திற்கு நலமாக உள்ளது .அதே சமயத்தில் அது தரும் ஆபத்துகளை தடுக்க பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் நாளை நடைபெறும் ஒரு அசம்பாவிதத்தை தவிர்க்க முடியும். தெருவில் நடமாடும் வடநாட்டு விற்பனர்கள் சீர்காழி நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்களை நினைவூட்டுகின்றன. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் சிசிடிவி போன்றவை தங்கள் வீடுகளில் பொருத்தவேண்டும். வீடு தேடி சம்பளம் பெற வரும் குர்கா விற்கு மதிப்பும் , பொருள் மதிப்பும் கொடுக்க வேண்டும். இயக்கங்கள் முன் வந்து முன் வந்து டூவீலர் லைட் போன்றவை அவர்களுக்கு ஏற்பாடு செய்யலாம். தெரு விற்பனையாளர்களுக்கு காவல்துறையுடன் இணைந்து அடையாள அட்டை போன்றவை நடைமுறைப்படுத்தலாம்.
வீடு தேடி வருபவர்கள், பொருள் தேடி வருபவர்களா அல்லது தேவைக்கு அழைக்க வருகின்றார்களா என்ற வித்தியாசம் அறியாதபடி அவர்களின் உடையும் செயலும் உள்ளது. அதில் அதிக பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த ஒரு திட்டம் தேவை . பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக உள்ளவர்கள், உண்மையான தேவை உள்ளவர்களை விட மிக அதிக அளவில் உள்ளார்கள். பணத்திற்கு பதிலாக பொருட்களை கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும். முக்கியமாக குழந்தைகளுடன் வருபவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தை திருட்டை ஒழிப்பதற்கு இது ஓர் முன்னோடி ஆகும். எனவே தெருவில் உள்ள ஆபத்துகளை, நமது வீட்டை அணுகாமல் தடுப்போம். பெருகிவரும் புழக்கத்தில் நாம் பாதுகாப்பு பழக்கங்களை கடைப் பிடிப்போம்.