என் பக்கம் - Editor's Page

வெளியே காத்திருக்கும் மக்கள்

சென்ற வாரம் அலுவல் காரணமாக சென்னை செல்ல வேண்டிய வாய்ப்பு வந்தது…..

இரவு உணவுக்காக சென்னையில் உள்ள ஒரு A2B ( பொதுவாக இங்கு உணவு விலை அதிகமாக இருக்கும்) உணவகத்தில் சென்றபோது அந்த பெரிய ஓட்டலில் உள்ளே அமர்ந்து சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கையும் வெளியில் அமர்ந்து காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கையும் ஒரே மாதிரி இருப்பதை காண முடிந்தது. அது அங்குள்ள மக்களின் பொருளாதார வலிமை, செலவு செய்யும் சத்தியை வெளி காட்டுவதாக உள்ளது…. அது மட்டுமின்றி மற்ற அளவுகோல்களின் ( surveys) படியும் நகர மக்கள் வசதியாக உள்ளதை அறிகிறோம் …

அதே நேரத்தில் நமது ஊரை போன்ற மற்ற கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரம் சோதனையாக உள்ளது. நாம்  தேர்ந்தெடுக்கும் அரசாங்கம்தான் அங்கேயும் ஆட்சி செய்கிறது ஆனால் ஏன் இந்த வேறுபாடு. ஆட்சியாளர்கள் நகர்ப்புறங்களில் வாழ்வதாலும் அரசாங்கத் திட்டம் திட்டுபவர்கள் நகரவாசி ஆக இருப்பதாகவும் காரணமாக இருக்கலாம், அதுமட்டுமின்றி அரசாங்க ஊழியர்களுக்கு   ஊதிய சம்பளம் உயர்வு தொடர்ந்து கிடைத்தது கொண்டு இருக்கும்.

அதே நேரத்தில் கிராமப்புற பொதுமக்கள்  திண்டாடி வருகிறார்கள்….இவர்களும் செழிப்பு பெறும் வகையில் , ராமேஸ்வரத்தில் மீன்வளத் துறை மற்றும் தஞ்சையில் விவசாய துறை  போன்ற புறமாவட்டங்களில் உள்ள பரவலான அரசாங்க அமைப்புகளின் வளமை பரவலாகுமா என கேட்க தோன்றுகிறது …

கருத்து தெரிவியுங்கள்