என் பக்கம் - Editor's Page

from the editor….

மதுக்கூரில் கொரோனா  கட்டுப்பாடுகள் தளர்ந்து சகஜ வாழ்க்கைக்கு வருவது அச்சத்துடன் சந்தோஷமாக உள்ளது. அதன் பலனாக பயணங்கள் தொடங்கியது.

இந்த மாதம் கல்வி மற்றும் சமுதாய ஆராய்ச்சி நிறுவனம் மூலம் சென்னை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்ற வாய்ப்பு கிடைத்தது. சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐகோர்ட் நீதிபதி ஜஸ்டிஸ் எஸ் ஜெகதீசன் கலந்து கொண்டார்கள். கல்வியின் தரம் மற்றும் அதனை மேம்படுத்த வேண்டிய வழிகளைப் பற்றி கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டது.

கடந்த வாரம் அலுவல் காரணமாக துபாய் சென்றடைந்து அங்குள்ள நமதூர் மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இங்கு  கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளதை உணர முடிந்தது இங்கு பொருளாதாரம் மீண்டு வரும் என்ற நம்பிக்கை ஒளி தெரிகின்றது. இந்த சோதனையில் இருந்து விரைவில் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். அதுவரை பாதுகாப்புடன் இருப்போம்

கருத்து தெரிவியுங்கள்