என் பக்கம் - Editor's Page

ஆட்சி முறை..

ஒவ்வொரு மாதமும் கோவிட் தொற்றுநோயால் ஏற்படும் விளைவுகள் பற்றி எழுதுவது மனவருத்தத்தைத் தருகின்றது. இன்றைய இந்தியாவின் சூழ்நிலையை காணும் பொழுது இந்திய அரசாங்கத்தின் நிர்வாக அலட்சியத்தை காட்டுகிறது. மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி என்பதற்கு உதாரணமாக,  நல்ல கட்டமைப்பு எதிர்பார்க்காமல் மதம் சிந்தனையை முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்ட ஆட்சி, அந்த  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே கொள்கையாக கொள்ளும், ஏனென்றால் அது மக்களின் ஓட்டு வங்கியை நம்பியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மரணங்கள் கஷ்டங்களின் முடிவு அல்ல, அது கஷ்டங்களின் ஆரம்பமாகும். தந்தை தாயை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது, கணவனை இழந்த மனைவி அல்லது மனைவியை இழந்த கணவன், வாழ்க்கை ஒரு இருண்ட காலம் ஆகும். தன் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை யாரை நோக்கி இருப்பது, அவர்களின் எதிர்காலத்தை யார் பாதுகாப்பது என்பது போன்று ஆயிரம் கேள்விகள் உள்ளது. இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் என்னவாகும்…

சிறு இயக்கங்கள் முதல் தேசிய அரசியல் அமைப்பு வரை , சுயநலம் சுயவிளம்பரம் தேடும் தலைவர்களாக இல்லாமல்,  நீண்டகால திட்டங்கள், நிரந்தர தீர்வு, கல்வி மற்றும் வழிகாட்டி பிரச்சனைகளை ஆராய்ந்து அறியும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்…..

மக்கள் தன் தேவைகளை தலைவராக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

கருத்து தெரிவியுங்கள்