என் பக்கம் - Editor's Page

மதுக்கூர் இந்த வாரம்

மதுக்கூர் இந்த வாரம்

     இரு நாட்களின் கடுமையான வெப்பநிலைக்கு பிறகு கடந்த நாட்களில் பெய்த மழை மண்னையும் மனதையும் குளிரவைத்தது.

சமிப நாட்களாக தொடர்ந்த மரணங்களும் அதனுடன் தொற்று நோய் காரணமாக தொற்றிக் கொண்டதையும் அறிந்து மனம் வலித்தது இறைவன் நமக்கு பாதுகாப்பு தர இறைஞ்சிகின்றோம்.

     நமது ஊருக்கு ஒர் ஆம்புலன்ஸை,கொண்டுவருவதற்கு ஒரு அமைப்பும், புதிய மையவிடியை பயன்பாடுக்கு கொண்டு வர மற்ற ஒரு அமைப்பும் முயற்ச்சில் உள்ளது. பாரட்டுகள் இன்றைய நாட்களில் கொரோனா தொற்று பயம் நமது மக்களின் மனதில் உள்ளது. ஆரம்பத்தில் காரணத்தை கணடு பிடித்தால் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நிறுபனம் ஆகிவருகின்றது. அது நமக்கு ஆறுதலாக உள்ளது. எனவே தடுப்போம், மீறினால் மீள்வோம். நம்பிக்கையோடு இருப்போம்.

    தொழில்களை பொருத்தவரை “ Welcome to India ” என்ற தொடர்படி புதிய தொழில்கள் கடைகள் மதுக்கூரில் திறக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில் “ Localized Economy ” என்ற பொருளாதாரதத்துவப்படி மதுக்கூர் மற்றும் அதனை சேர்ந்த கிராமங்களின் பண சுழற்ச்சி நடைமுறை உள்ளது. போக்குவரத்து பழைய நிலைக்கு மாறும்பொது நிலமைகள் மாறலாம், ஆனால் நேர்மையான, சிறந்து பயனாளிகள் சேவைகள், நியாயமான விலை என்று சிறப்புகளால் நாம் வியாபாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்.

   இப்பொழுது உள்ள பொருளாதார சிக்கல்களினால் கல்வியை கடைநிலைக்கு எடுத்துச்செல்லும் பெற்றோர்களால்,குழந்தைகளின் எதிர்கால கல்வி பாதிப்பு அடையும் என்று எச்சரிக்க வேண்டியுள்ளது, வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் வருபவர்கள் சமூக சேவையில் வேகமாக செயல்பாடுவது பாரட்டுக்குரியது, அதே சமயத்தில் தாயகத்தில் இருந்து தொடர்ந்து சேவை செய்பவர்களையும் மதிக்கவும் வேண்டும்.

 தொடரும் அடுத்த வாரம்…

கருத்து தெரிவியுங்கள்