என் பக்கம் - Editor's Page

இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

மதுக்கூர் வாழ் மக்களுக்கு மதுக்கூர்.காம் சார்பாக இனிய பெருநாள் வாழ்த்துகளை சமர்பிக்கின்றறோம்.

வெளிநாடுகளில் வாழும் நமது மக்கள் இன்றும் (31.07.2020) மதுக்கூரில் நாளையும் (01-08-2020) பெருநாள் கொண்டாடிகின்றார்கள்.

Every cloud has a silver lining  என்பது போல கடின சூழ்நிலையிலும் தாயகம் வந்த மக்களுக்கு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட வாய்ப்புகிடைத்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயினால் நாம் நமது பள்ளிகளில் தொழுவும் வாய்ப்பை இழந்து உள்ளோம். எல்லாம் வல்ல அல்லா நமது இமானைகொண்டும், நாம் செய்த நற்செயல்களை கொண்டும் நமது பவாங்களை மன்னித்து பரக்கத்தை தர துஆச் செய்வோம்.

மேலும் தொற்று நோய்களில் இருந்து இன்நாள்வரை நம்மை பாதுகாத்த இறைவன் இனி வரும் காலங்களில் உலக மக்கள் அனைவருக்கும் பாதுகாக்க துஆச் செய்வோம்.

இப்பொழுது உள்ள வர்த்தக சூழ்நிலைகள் தற்பொழுது உள்ள கட்டுப்பாட்டை பொருத்து மாறிவருகின்றது. கடைகள், நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இக்காலம் திருவிழாக்காலம் போல் உள்ளதால் எந்த முதலிடும் நிண்டகால நோக்கத்தில் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

குறுகிய வருங்காலத்தில் மக்கள் தொகையிலும், தனிப்பட்ட வருமானத்திலும் பெரும் மாற்றம் இல்லாத சுழ்நிலை உள்ளது. அதே நேரத்தில் மக்கள் தங்கள் சேமிப்பை எடுத்து வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற சுழற்சினாலும், விவாசயத்தினாலும் பணம் புழுக்கம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

பொருளாதாரத்தை சரியாக கணிக்க முடியாத வகையில் நிலயற்ற நிலை உள்ளதால் தொழில்களை பொருத்து காத்திருக்க வேண்டி உள்ளது. காலம் பொன் போன்றது!!!!!

கருத்து தெரிவியுங்கள்