என் பக்கம் - Editor's Page

தேர்தல் களம்

தமிழ்நாட்டில் தேர்தல் நிலவரம் சூடுபிடித்துள்ளது. அதன் பாதிப்பு  மதுக்கூரிலும் தெரிகிறது. முன்பெல்லாம் அதாவது, 1975 ஆண்டுகளில், தேர்தல் என்றால் மதுக்கூர் கீற்று சந்தையில் பொதுக்கூட்டமும், சைக்கிள் ஊர்வலம் வேடிக்கையாக இருக்கும். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்துக்களை இது போன்ற நிகழ்ச்சிகளில் பேசுவார்கள்.

இன்று  இணையதளம், TV மூலம் அன்று நடைபெறும்  நிகழ்ச்சிகளை அன்றே அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவைகள் அத்தனையும் விமர்சனங்கல்லாகவும் கருத்துகல்லாகவும் உள்ளது. அவை உண்மை தானா என்று அறிந்து கொள்வதற்கு எந்த ஒரு வாய்ப்பும்  இல்லாமல் உள்ளது.

மக்களின் ஆதரவை இன்று , மீடியா டெக்னாலஜி தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஒன்றை திரும்ப திரும்ப படிப்பதால், கேட்பதால் அதனை உண்மை என்று நம்புகிறோம். ஒரு நோய் என்றால் ஒரு நல்ல மருத்துவரை தேடும் நாடும் ஒரு செய்தி அல்லது கருத்தை தெளிவுபடுத்திக் கொள்ள,  அதனை சார்ந்த அறிவு உள்ளவர்களை தேடி போவதில்லை.

இந்த தேர்தலில், நாம் கேட்பதையும் படிப்பதையும் பார்ப்பதையும் மட்டும் நம்பாமல், அறிவு பூர்வமாக சிந்தித்து நல்ல ஆட்சி அமைய நமது ஓட்டுகளை போடவேண்டும்.

அலட்சியமும், அவசரமும் ஆபத்தாக முடியும்.

கருத்து தெரிவியுங்கள்