நமது ஊர் மற்ற ஊர்களைப் போல சராசரியை விட அதிகமான மழைப்பொழிவை பெற்றுவருகிறது. பல மாநிலங்களில் வெள்ள அபாய அறிவிக்கப்பட்டு அணைகள் திறந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த அதிக மழை பொழிவிற்கு உலக வெப்பமயமாதல் தான் காரணம் என சொல்லப்படுகிறது.
இது பசுமை வெளியேற்றம் எனப்படும் வளிமண்டலத்தில் விடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு மீத்தேன் போன்ற கடும் வாயுக்களால் ஏற்படுகிறது. சமீபத்தில் உலக நாடுகள் அளவில் நடந்த கூட்டத்தில் இந்தியாவின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்தியா உலக நாடுகள் அளவில் பொருளாதாரத்தில் 6வது இடத்திலும் பசுமை வெளியேற்றத்தில் நான்காவது இடத்திலும் உள்ளது அதே நேரத்தில் சூரிய சக்தி மற்றும் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
உலக வெப்பமயமாதலை தடுக்கும் முதலீடு இன்றைய நிலையை பொருத்து இல்லாமல் அதற்கு காரணமான நாடுகளில் இன்றைய நிலைமையை பொறுத்து இருக்க வேண்டும் என வாதாடுகிறது. இது உலக அளவில் நடைபெறும் விவாதம். இனி நாம் நமது உள்ளூரில் ஏற்படும் பாதிப்பை பார்ப்போம்.
தற்போது கொரோனா நோய் தொற்றிலிருந்து வெளியேறி சற்று சுதந்திரமாக மூச்சு விடுகிறோம், அதே நேரத்தில் இந்த மழை நீரில் உற்பத்தியாகும் கொசுவினால் வரப்போகும் நோய்களைப் பற்றி அறிந்துள்ளோம். டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பல போர்களில் வெற்றி தோல்விக்கு பல நாடுகளின் அழிவுக்கும் காரணம் என்பது சரித்திரம். நம்மையும் நமது குடும்பத்தையும் நமது சமுதாயத்தையும் சந்ததிகளையும் காப்பாற்ற வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது தான்.
அதில் ஒன்று நமது வீட்டு குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் வீடு தேடி வரும் வரை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றலாம் என உறுதி எடுப்போம் உயிரை காப்போம்.