என் பக்கம் - Editor's Page

உலக வெப்பமயமாதல்

கோவிட்19 நம்முடன் ஒளிந்து விளையாடிக்கொண்டுருக்கும் இந்த நேரத்தில் மற்றொரு ஆபத்து நம்மை நெருங்கிவருகின்றது. அதுதான் குளோபல் வார்மிங் எனும் “உலக வெப்பமயமாதல்”. பல இயற்பியாலர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து எச்சரிக்கை செய்தும் உலக ஆட்சியாளர்கள் அதனை கண்டு கொள்ளாததன் விளைவுகளை இன்று நாம் கண்டு கொண்டு வருகின்றோம்.

சினாவின் செஞ்சுளு என்ற மாகாணத்தில் ஒரு வருடத்தின் சாரசரி மழை முன்றே நாட்களில் கொட்டிதீர்ததன் விளைவு பல உயிர்களும், பல கோடியான சொத்துகளாகும். அதே வெள்ள பாதிப்புகளை ஜெர்மனி உள்பட பல ஐரோப்பிய நாடுகளும் சந்தித்துள்ளன .

அமெரிக்கா, கிரிஸ், துருக்கி ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காட்டுபகுதிகளில் இன்று வரை தொடர்ந்து எரிந்து வருகின்றன. அண்டார்டிகாவில் பனிபாறைகள் வேகமாக உருகி வருகின்றன.

வானிலை மாற்றத்தை ஒரளவு கணிக்கமுடிந்தாலும் அதன் விரியத்தை கணிக்க இப்பொழுது உள்ள கணிபொறியின் வேகத்தைவிட மிக, மிக வேகமான கணிபொறி வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

நாமும் சென்னை வெள்ளத்தையும், கஜா புயலையும் சந்தித்துள்ளோம். இனிவரும் காலத்தில் வானிலை மாற்றத்தால் எற்படும் பேராப்பதுகளையும் எதிர்கொள்ள தாயாரக இருக்கவேண்டும். அதனை தவிர்க்கவும் நாம் மரம் வளர்த்தல், பிளாஸ்டிக்கை தவிர்பது, புதைபடிவ எரிபொருள் பயண்பாட்டை குறைத்து மின்சார வாகனங்களை பயண்படுத்த தொடங்குவது போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நாம் இந்த பூமியை நமது முன்னோர்களிடம் இருந்து இனமாக பெறவில்லை, நமது குழந்தைகளிடமிருந்து கடனாக பெற்றுள்ளோம் என்பதை உணரவேண்டும்.

கருத்து தெரிவியுங்கள்