என் பக்கம் - Editor's Page

மாற்றம்..

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவது மக்களுக்கு நம்பிக்கையும், நிம்மதியும் தருகின்றது. முடங்கி கிடந்த நாம் உலக அரங்கில் நடைபெற்ற மாற்றங்களையும் நோக்கும் பொழுதும் சிறிது மனது ஆறுதல் தருகின்றது. அவற்றில் சில:

இஸ்ரேல், பாலஸ்தின தாக்குதலில் முதல் முறையாக இஸ்ரேல் இறங்கி வந்து பாலஸ்தினத்துடன் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள ஒப்பந்தம் செய்துக்கொண்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து முழு படையையும் அமெரிக்க நேட்டோ நாடுகள் விலகிகொள்ள முடிவு செய்து வெளியேறி வருகின்றன. தாலிபான்களுடன் தொடர்பில் உள்ள கத்தார் நாட்டிற்கு இரு முறை இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பயணம் செய்தது குறிப்பிடதக்கது.

ஒன்றிய அரசு காஷ்மீர் அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்தை நடைபெற்று வருகின்றது. காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கையான செய்திகள் வருகின்றது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யா பிரசிடண்ட் புதின் சந்திப்பில் தங்களுக்குள் உள்ள பனிபோரை நிறுத்திகொள்ள முடிவு செய்தது, மனிதகுலத்திற்கு எதிரி-  கண்ணுக்கு தெரியாத கிருமி என்பதை உணர்ந்தது போல் உள்ளது.

இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனமான ரிலையன்ஸ், சவுதி அரேபியாவின் அராம்கோவை பங்குதாரக சேர்த்து, மிக பெரிய பசுமை முலதனத்தின் அறிவிப்பை கொடுத்தது. அது ஐக்கிய அரபு நாட்டின் அட்னாக் உடன் புதிய வாணிக ஒப்பந்ததை செய்ய உள்ளது.

ஓன்றிய அரசு நீதி மன்றத்தில், தான் வெளிட்ட சுற்ற அறிக்கை CAA அமுல்படுத்த இல்லை என்றும் அது எற்கனவே உள்ள சட்டத்தை அமுல் படுத்துவதாகவும் கூறியுள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது.

கருத்து தெரிவியுங்கள்

madukkur.com

FREE
VIEW