வாழ்கைமுறை - Lifestyle

ஷாஹீன் பாக்

Shheen bagh
புது தில்லியில் 63 நாட்களாக பெண்கள் தலைமையேற்று பெண்களே நடத்திக் கொண்டு இருக்கும் போராட்டம் தான் ஷாகின் பாக்.
பல்வேறு தரப்பினரும் ஆதரவு தந்துள்ள இந்த தொடர் போராட்டம் அங்கே நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்துக் கொண்டு இருக்கிறது.
இவர்கள் முழக்கம், அமர்ந்து இருத்தல், உண்ணா விரதம், பொது விவாதங்கள், வகுப்புகள் எடுத்தல், பாடல்கள், கலையுடன் கூடியவைகளாக போராட்டத்தை நடத்துகின்றனர்.
இந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக ஷாகின் பாக் போராட்டம் பெயரில் அதேபோல கல்கத்தா,  மும்பை, அலகாபாத், டியோபான்ட், கயா, திருவனந்தபுரம், பெங்களூரு ஆகிய நகரங்களில் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது.

கருத்து தெரிவியுங்கள்