தேநீர் நேரம் - Tea Time

நகல்: Jan 10, 2020

ஆத்மார்த்த நட்புகளே

 நலம் நலமறிய

 என்ன சேதி? எப்படி இருக்கீங்க?

 மார்கழி மாதம் துவங்கியது முதல் பனிப்பொழிவு இருந்தாலும்

 அந்த அளவுக்கு குளிர் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த இரன்டு நல்ல குளிர்.

 இரவு நேர வெப்பனிலை நேற்று இரவு முதன் முதலாக 20 டிகிரி வரை இருந்தது,.

 அதே போல பனி, சாரல் அதிகம்.

 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பு நாடு முழுவதும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது நாம் அறிந்ததே.. நமது ஊரிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டனர். முக்கூட்டுச்சாலையில் துவங்கிய மனித சங்கிலி பேருந்து நிலையத்தை கடந்தும் நின்றது. எல்லாம் வல்ல இறைவனிடம் அதிகமாக பிரார்த்தனைகள் செய்வோம்.

 அனைத்து சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வோம். நமது இந்திய தேசம். அழகானது.

 ஏராளனமான மதங்கள், ஏராளனமான மொழிகள், இதில் பேசும் மொழிகள் சில மொழிகளுக்கு எழுத்துக்கள் கிடையாது. அது போல எந்த ஊரிலிருந்து நாம் புறப்பட்டாலும் 300 கி.மீ. தாண்டிவிட்டால், மொழி, உடை, கலாச்சாரம், உணவு, எல்லாம் மாறுபடும். அதான் இந்தியாவின் தனிச்சிறப்பு.

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் கோவா சுற்றுலா சென்று வந்தார். அதாவது டிஸம்பர் கடைசிவாரம். கிறிஸ்மஸ் அங்கே கொண்டாட சென்றார். வழக்கமாக கோவாவில் இது போன்ற கடைசி வாரங்களில் அதிகமாக வெளி நாட்டவர்கள் வருவது இருக்கும்.

 ஆனால் இந்த வருடம் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாம்.

 காரணம் நமது நாட்டில் நிலவி வரும் அரசியல் பிரச்சனைகள் தான்.

 

கருத்து தெரிவியுங்கள்