பொது செய்தி - General

மிட்டாய் தாத்தா

மிட்டாய் தாத்தா

 கடந்த வாரத்தில் பிரபலமான ஒரு முதியவர்

 தஞ்சாவூர் கீழவாசலில் வசித்து வரும் முகமது அபுசாலிபு. இந்த முதியவரின் வயது 113.

 இறைவன் கொடுத்த வரம். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அன்றைய பர்மாவில்.

 அப்போது நடந்த கலவரத்தில் தன் குடும்பத்தை இழந்து வேதனையுடன் இந்தியாவுக்கு

 வந்தவர் மதறாஸ் வந்து  பாண்டிச்சேரியில் இருந்து கால் நடையாக தஞ்சாவூர் வந்துள்ளார்.

 கடந்த 63 வருடங்களாக தன் கையால் மிட்டாய் தயார் செய்து

 தஞ்சை நகரில் பல தெருக்களில் மிட்டாய் வியாபாரம் செய்யும் இந்த உழைப்பாளியை நம்மால் மறக்க முடியவில்லை. பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இப்போது இந்த மிட்டாய் தாத்தா இருக்கிறார். நமது சந்திப்பின் போதும் நாளைய விற்பனைக்காக மிட்டாய் தயார் செய்து வருகிறார். 

 இவருக்கு சிலர் வாழ் நாள் சாதனையாளர் விருது கொடுக்க இருக்கின்றனர்.

 இப்போதும் ஊடகங்கள் மட்டுமல்ல தனி நபர்களும் இவரை வந்து சந்தித்து

 ஆசையாக மிட்டாய் வாங்கி செல்கின்றனர். இவரை சந்தித்து விடை பெறும்போது எல்லாரும் நல்லா இருக்கனும் என கூறுகிறார் மிட்டாய் தாத்தா…..

 எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்து தெரிவியுங்கள்