பயணம் - Travel

உலக சுற்றுலா தினம்

இடுக்கி ஜில்லாவில் பீர்மேடு தாலுகாவில் அமைந்த அழகான பஞ்சாயத்து் ELAPPARA,  கடல் மட்டத்திலிருந்து சுமார் 3300 அடி உயரம்.

செல்லும் வழியிலும் ஊரைச் சுற்றிலும் பச்சை பசேல் தான்.

அவ்வளவும் தேயிலை தோட்டங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியான மனதிற்கு அமைதியான மலைமேல் அழகான ஊர். 

இது வாகமனுக்கு அருகில் உள்ளது. சுமால் 26000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். பேருந்து நிலையம், கடைகள், தங்குவதற்கு லாட்ஜ், ஹோட்டல்கள் என எல்லாம் உண்டு. தொழுகையாளிகளுக்கு பள்ளிவாசல்கள், ஸலபி ஜுமா பள்ளியும் உண்டு. இது குட்டிகானத்திலிருந்து கட்டப்பனா செல்லும் வழியில் உள்ளது. சுத்தமான கேரள உணவு வகைகள் கிடைக்கிறது. காலையில் சுடச்சுட புரோட்டா, ஆப்பம், தோசை, இட்டலி, 

 கறி எந்தா வேண்டும்? என கேரளா உணவு வகைகள் 

 அங்கே உள்ள உணவகங்களில்…

 கூடவே கட்டஞ்சாயா?

 இது போன்ற பசுமையான ஊர்களில் அமைதியாக இரன்டு மூன்று நாட்கள் பொழுதை கழிக்க அருமையான இடம்.  செப்டெம்பர் 27 உலக சுற்றுலா தினம் எனது ஞாபகத்தில் வந்தது ஏலப்பார.

கருத்து தெரிவியுங்கள்