பொது செய்தி - General

மதுக்கூரில் இரு தினங்களில் பெய்த மழை

மதுக்கூரில் இரு தினங்களில் பெய்த மழை வெப்ப நாட்களை அனுபவித்து வந்த மக்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது. கடந்த வெப்ப நாட்களில் ஓர் ஆறுதலான விஷயம் , குறைவான தடைகள் இருந்த மின் விநியோகம். கடந்த சில நாட்களில் சில பகுதிகளில் மின் தடை அதிகமாக இருந்ததுக்கு காரணம், புதியதாக அமைக்கப்பட்டு வரும் ட்ரான்ஸபார்ம் ஆகும்.

இந்தியாவை பொருத்து பெருமைப்பட வேண்டிய விஷயம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திராயன் 2,நிலவில் நிரை கண்டுபுடித்த இந்தியா இன்று நிலாவின் தென்பகுதியை ஆராய உள்ளது. விண்ணில் ஏவிவிட்ட இந்தியாவின் பகல் நேரத்தில் ஆஸ்திரேலியாவில் இரவு நேரமாகும், அவர்கள் விண்ணில் பாய்ந்து சென்ற நில வெளிச்சத்தை அச்சத்துடன் பார்த்து அது இந்தியாவின் விண்கலம் என்று அறிந்து ஆச்சரியம் அடைந்துள்ளாரகள்.

நிலாவில் உள்ள நிரை காண்பது ஒருபுறம் இருக்கட்டும் இங்கு காவேரி நிரை காண கண் அலைகின்றது. சேலத்தில் 100 ஏரிகளை 565 கோடி திட்டத்தில் காவேரி நிரைக்கொண்டு நிரப்ப முதல்வர் எடப்பாடி திட்டம் வகுத்துள்ளது தஞ்சை டெல்டா மக்களை வஞ்சிப்பது ஆகும். மேட்டூர் அணையின் நிர்வாகம், இந்நாள் வரை தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் இருந்தது,ஆனால் மேட்டூர் அணையின் நிர்வாகம் முதல் அமைச்சரின் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது,தமிழ்நாடு தஞ்சையை வஞ்சிக்கிறது.(இன்னும் வரும்)…

கருத்து தெரிவியுங்கள்