பொது செய்தி - General

நான் அனுபவிக்கிறேன்;

நான் அனுபவிக்கிறேன்; 
நான் சில காலம் முன்பு ஒரு Electronics show Room ல், ஓரளவு discount கேட்டு (கொஞ்சம் பேரம் பேசி) ஒரு புதிய T.V வாங்கினேன். பில் எழுதுமுன் அந்த salesman, “சார்,xxxxx ஃபைனான்ஸில் லோன் மூலம் வாங்கிக் கொள்ளுங்கள் சார்” என்றார். நான் மொத்தப் பணம் கொடுக்கத் தயாராக இருந்ததால், லோன் எதுவும் வேண்டாம் என்றேன். அந்த சேல்ஸ் மேன், “சார், லோன் வாங்குவதால் extra வட்டி எதுவும் செலுத்த வேண்டியதில்லை; நீங்கள் வாங்கும் மொத்த விலையையே மாதா மாதம் சிறு amount (equated monthly instalment) ஆகக் கொடுத்தால் போதும்; இதனால் எனக்குக் கொஞ்சம் கமிஷன் கிடைக்கும் சார்” என்றார். நான், “அதெப்படி, மொத்தமாகக் கொடுத்தாலும் தவணையாகக் கொடுத்தாலும் ஒரேவிலை வரும் ?” என்று கேட்டேன். அதற்கு அவர், “சார், லோன் வாங்குவதை ஊக்கப்படுத்துவதற்காக எங்கள் show room ல் சில நாட்களுக்கு இவ்வாறு சலுகை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நீங்கள் லோன் மூலம் T.V. வாங்குவதால் உங்களுக்கு விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதே சமயம் எனக்கும் கொஞ்சம் பணம் கிடைக்கும் சார்” என்றார். “கடன் வாங்கினால் பிறகு கடன் தீரும் வரை, அதிகமாகவோ, குறைவாகவோ பிடித்தம் செய்யாமல் கவனமாக நான் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமே” என்றேன். அவர், “இல்லை சார், தங்களது Bank account ல் இருந்து குறிப்பிட்ட தவணைத்தொகை மாதா மாதம் எங்களுக்கு credit ஆகும் வகையில் இங்கேயே படிவம் பூர்த்தி செய்து வாங்கிக் கொள்கிறோம். எனவே எந்தத் தொந்தரவும் வராது சார்” என்றார். இரண்டு மூன்று பக்கங்கள் கொண்ட படிவத்தைக் காண்பித்து, அதில் தவணைத் தொகை, மற்றும் மொத்த விலையைப் பூர்த்தி செய்து எனது கையொப்பத்தையும் வாங்கிக் கொண்டார். ஒரு cancelled cheque leaf ம், Bank pass book ன் முதல் பக்கம் மற்றும் transactions காண்பிக்கும் ஒரு பக்கத்தின் நகலையும் மறுநாள் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டார். நானும் அவ்வாறே செய்தேன்.
குறிப்பிட்ட தவணைகளில் xxxx Finance க்குப் பணம் கிடைக்கப் பெற்று, கடன் முழுவதும் அடைக்கப் பட்டுவிட்டது. அதற்கான குறுஞ்செய்தியும் (sms message)xxxx Finance ல் இருந்து எனது mobile phone க்கு வந்தது.
இதற்கிடையில், xxxx Finserve நிறுவனம், எனக்கு ஒரு membership card (ATM card போல) தபாலில் அனுப்பியிருந்தார்கள்.
கடன் தீர்ந்து விட்டதால் நான் நிம்மதியடைந்தேன்.
ஆனால் அதற்குப் பிறகு நடந்தது என்ன ? தொடர்ந்து படியுங்கள் ……………..)

(தொடர்ச்சி …… 2 வது பக்கம்)
ஆனால் அதற்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் எனது account ல் இருந்து ரூபாய் 100 + taxes பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் ! அதற்கு “card inactivation charges” என்று பெயரிட்டிருக்கிறார்கள் ! அதாவது, நாம் மறுபடி லோன் வாங்கவில்லையென்றால், வருடா வருடம் இவ்வாறு பிடித்தம் செய்வார்களாம் ! இந்த “கண்டிஷனையும்” அந்தப் படிவத்தில் (இரண்டு மூன்று பக்கங்கள் “terms & conditions” எழுதியுள்ளவற்றில்) இந்த condition க்கும் சேர்த்துத்தான் நமது கையெழுத்தை வாங்கியிருக்கிறார்கள் ! (நானும் கையெழுத்து போட்டிருக்கிறேன் போல !)
அதாவது, கடன் வாங்கி, கடன் நிலுவையில் இருக்கும் காலம் வரை இந்தப் பிடித்தம் செய்யமாட்டார்களாம். ஆனால் கடன் தீர்ந்து, மறுபடி கடன் வாங்காவிட்டால், இந்த “inactivation charges” எனது ஆயுள் முழுவதும் பிடித்தம் செய்து கொண்டே இருப்பார்களாம் !
இவ்வாறு கொழுத்த பணமுள்ள corporate கம்பெனிகள், பொருள்களை விற்கும் show room களின் (salesmen களின்) மூலம் நம்மையறியாமலேயே ஏமாற்றுகிறார்கள்.
அரசாங்கமும், இது போன்ற corporate நிறுவனங்களின் Terms & condition களுக்கு எந்த வரைமுறையையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் எந்த terms & condition வேண்டுமானாலும் எழுதலாம்; அவற்றை பக்கம் பக்கமாக சிறு எழுத்துக்களில் எழுதியுள்ள மற்ற terms & condition களில் எங்கேயாவது இடையில் செருகிவிட்டு, இதைப்பற்றியெல்லாம் விளக்காமல், தவணைப்பணம், தவணைக் காலம் பற்றி மட்டுமே விளக்கிவிட்டு, sales show room களின் மூலம் நம்மை லோன் வாங்கிக் கொள்ளும்படிக்கு கேட்டுக் கொண்டு, அவர்களின் காரியத்தை இம்மாதிரி தரக்குறைவான வியாபாரத் தந்திரங்களால் சாதித்துக் கொண்டு விடுகிறார்கள். அரசாங்கத்திற்கு நம்மிடம் ஓட்டு வாங்குவதில் மட்டும் தான் இலக்கு. அந்த வேலை முடிந்தவுடன், கட்சிக்கு Donation கொடுக்கும் corporate களுக்குத்தான் அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும்.
அனுபவப் படுகிறேன்; பகிர்ந்தேன். மற்றபடி, தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு, தமிழில் எல்லாம் புரியும்படி விளக்குவதற்கு அவர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. Corporate கம்பெனிகளும் அவர்களைச்சார்ந்த வியாபாரிகளும் வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவுக்கு உண்மையை மறைக்க முடியுமோ அந்த அளவுக்கு மறைத்துவிட்டு, terms & conditions மாத்திரம் ஏராளமாக எழுதிவிட்டு, நமக்கு நம்பிக்கை ஏற்படும்படிக்குப் பேசி, அதில் நமது கையெழுத்தை மட்டும் வாங்கிவிடுவார்கள்.
எனது அனுபவத்தைப் பகிர்ந்தேன். மற்றவரது அனுபவத்திலிருந்து கற்று எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு சொந்தமாக அனுபவம் ஏற்படும்வரை ஏமாந்து கொண்டிருக்காதீர்கள்.

கருத்து தெரிவியுங்கள்