வக்பு உரிமை மீட்பு மாநாடு

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மூலம் தஞ்சையில் 2 2 2025-ல் நடத்திய வக்பு உரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது

அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முக்கிய தலைவர்களின் பெயரும் அவர்கள் வகிக்கின்ற பொறுப்பையும் மாநாட்டிலேயே நான்கு முறை கேட்டு விட்ட காரணத்தால் அதனை நான் இங்கு குறிப்பிடுவதை தவிர்த்து விட்டேன்

மாநாட்டில் பேசிய அனைவரும் இச்சட்டத்தில் நோக்கம் அதனால் நமது சமுதாயத்துக்கு ஏற்படும் இழப்புகளை மிகச் தெளிவாக கூறினார்கள் இது வக்பு சட்டத்தை திருத்தும் மசோதா அல்ல மாறாக வக்பு சொத்துக்களை திருடும் மசோதா என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்

கடைசியில் பேசிய மாநில தலைவர் நெல்லை முபாரக் அலி அவர்கள் அதில் அரசியலைப் புகட்டி ஒரு கட்சியை விமர்சித்து பேசியது நடு நிலையாளர்களின் முகத்தை சுளிக்க வைத்தது ஆனால் அது மூலம் கிடைத்த கருத்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நம்மை தவிர வேறு யாருமில்லை

அதேசமயம் எஸ் டி பி ஐ முழுமையாக எதிர்ப்பவர்களுக்கு (என்னிடம் பயணித்தவர்களில் சிலர்) உள்ள கேள்வி இதுபோன்ற அமைப்பும் போராட்டமும் இல்லை எனில் அல்லாஹ்வைத் தவிர முஸ்லிமை காப்பாற்றுபவர்கள் யார்?

மேலும் வக்பு சொத்தின் நொக்கம் இந்த கீழே உள்ள லிங்கை தயவுசெய்து கிளிக் செய்து படிக்கவும் https://madukkur.com/waqbboard/