ஒன்று கூடி ஒரே ஜும்மா தொழுகை

ஒன்று கூடி ஒரே ஜும்மா தொழுகையாக கடந்த வாரங்களில் நமது புதிய ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடைபெற்று வருகின்றது இது அல்லாஹ்வின் நாட்டம் . அதனால் நாம் அடைந்த நன்மையைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.

நமது முன்னோர்கள் பர்மாவிலும் பின்னர் சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் வேலை செய்து ரெண்டு அல்லது மூன்று வருடம் ஒருமுறை நமது ஊருக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை விடுமுறை வருவார்கள்.

பின்னர் அடுத்த சந்ததியினர்கள் அரபு நாடுகளுக்கு சென்று இரண்டு வருடம் ஒருமுறை பின்னர் ஒரு வருடம் ஒரு முறை விடுமுறையில் வந்து சென்றார்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் எளிதான வானவெளி பயணத்தின் வசதியால் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வந்து செல்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விடுமுறை வருடத்திற்கு ஒரு மாதம் தான் அதனால் ஒவ்வொரு முறையும் பெரும்பாலும் அவர்களின் விடுமுறை 10 தினங்களுக்கு மேல் இருப்பதில்லை இந்த குறுகிய காலத்தில் தன் சொந்தங்கள் மட்டும் தன் குடும்ப சொந்தங்களையும் கண்டு வர வேண்டி உள்ளது.

நமது குடும்பங்கள் பல குடும்பங்களாக பிரிந்து உள்ளது,நமது உறவு குடும்பங்கள் ஊரின் நாலா திசையிலும் பரந்து உள்ளது. உறவையும் நண்பர்களையும் பார்த்துக் கொள்வது பேசிக் கொள்வதும் மிக அரிதாக இருந்தது.

ஒன்று கூடிய ஒரே ஜமாத்தின் தொழுகையால் ஒவ்வொரு உறவையும், நண்பர்களையும்,விடுமுறையில் வந்த அவர்களையும்,பார்த்துக் கொள்ள முடிகின்றது நமது பெரியோர்களையும் தேடி சென்று சலாம் சொல்லி அவர்களின் துவாவை பெற முடிகின்றது

உங்களிடம் பேச வேண்டும் என்று இருந்தேன் யாரிடம் போன் எண் வாங்குவது என்று எண்ணி இருந்தேன் நேரிலேயே பார்த்துவிட்டேன் என்ற உரையாடலை நான் கேட்டுள்ளேன். இது கட்டுரையாளார்க்கும் ஏற்பட்டுள்ளது .

அது மட்டும் இன்றி நமது சமுதாயத்துக்கு கூற வேண்டிய விஷயங்கள் நிகழ்ச்சிகளும் நமது ஜமாத்தார்களாலும் வெளி ஜமாத்தார்களும் நமக்கு தெரிவிக்க ஒரு செய்தி தொடர்பாக உள்ளது.

தவ்ஹிது போன்ற சில வேறுபாடு கொள்கை உள்ள சகோதரர்களையும் ஜும்மா தொழுகையில் காண முடிந்தது அவர்களும் மேற்குறிய காரணங்களால் நமது ஜும்மா தொழுகையில் கலந்து கொண்டவர்களாக இருக்கும்

நமது சமூகத்தில் ஒற்றுமை ஏற்படுத்திட அல்லாஹ் நாடினால் அதை தடுப்பார் யார்?

இந்த நல்ல முடிவை எடுத்த ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் எல்லோரும் நலனுக்காக துவா செய்வோம்