நீண்ட கனவான புதிய இறை இல்லம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணை கொண்டு நமது மக்களின் நீண்ட கனவான புதிய இறை இல்லம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஐந்து நேர தொழுகையும் ஒன்று கூடிய ஜமாத் தொழுகை, இறை வணக்கங்களும் நிறைவேறி வருகின்றது.

பள்ளி கட்டி முடிக்க பொருள் உதவி செய்த நன் மக்களுக்காகவும் அதற்காக உழைத்த நமது மக்கள், என்ஜினியர்கள், உழைப்பாளர்கள் அனைவருக்காகவும் துவா செய்வோம்.

பள்ளி கட்டிட வரவு செலவு கணக்கு முடிக்கப்பட்டு அதற்காக கூட்டப்படும் சிறப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்க தயாராக உள்ளது

மேலும் அக்கூட்டத்தில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் முன்று பேஸ் (Three Phase) மின்சார இணைப்பு, ஜெனரேட்டர், பின் ஒது இடம் பள்ளிக்கான பாதை இன்டர் லாக் போன்றவற்றை பற்றி முடிவு எடுக்க வேண்டும்

மேலும் பெண்களுக்கான பாத்ரூம், சமையல் கூடம், விருந்துகூடம் அமைப்பது பற்றியும் யோசனைகளை பரிமாறி கொள்ள வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நல்ல நிய்யதுகளை நிவர்த்தி செய்து கொடுக்க தூஆ செய்வோம் -வஸ்ஸலாம்