Madukkur.com:அஸ்ஸலாமு அலைக்கும். மதுக்கூர் இணைதளத்திற்கு நேர்காணல் கொடுக்க சம்மதித்ததற்கு எங்களது இணைதளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.
SNA.Buhari: வலைக்கும் அஸ்ஸலாம். மதுக்கூர் இணையதளம் எனக்கு நேர்காணல் அளிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தது நான் தான் நன்றி சொல்ல வேண்டும். தங்கள் இணைத்தளம் மூலம் எனது கருத்துக்களை சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது
Madukkur.com:முதலில் புதிய பள்ளி கட்டுமானத்தை பற்றி தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள விரும்புகின்றோம் தங்களின் இப்பொழுது கட்டுமான பணிகளைப் பற்றி சொல்லவும்
SNA.Buhari எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளினால் புதிய பள்ளி வேலை தடை இன்றி நடைபெற்று வருகின்றது இன்ஜினியர் மூலம் ஒப்படைத்த பெயிண்ட் வேலைகள், மின்சார வேலைகள், நிலை வேலைகள் அவரின் கட்டுப்பாட்டில் அவரது இன்ஜினியர் திரு கார்த்திக் அவர்களின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகின்றது. மற்ற மார்பில் எஸ் எஸ் வேலைகள் ஜன்னல் வேலைகளும் நடைபெற்று வருகின்றது
Madukkur.com:மற்றும் செய்ய வேண்டிய வேலைகள் அதற்குரிய பொருளாதாரம் ,காலம் பற்றி ….
SNA.Buhari: நமது பள்ளி வாசல்களில் சுமார் 32 ஜன்னல்கள் மற்றும் 32 நிலையான ஜன்னல்கள் உள்ளது. அதற்கு மரம் பயன்படுத்தினால் சுமார் 48 லட்சம் தேவைப்படும். மேலும் அதனை முடிப்பதற்கு 8 மாதம் தேவைப்படும். உள் பள்ளியில் உள்ள வாசல்களுக்கு கதவு மரத்தால் செய்வதாக இருந்தால் அதற்கு சுமார் 16 லட்சம் தேவைப்படும் காலதாமதம் ஆகும்
எனவே துபை மற்றும் இக்கால பள்ளிவாசல்களில் உள்ளது போல UPVC பயன்படுத்த முடிவு செய்தோம். அதனால் சுமார் 40 லட்சம் மிச்சமானது. ஒரு வருட கால தாமதத்தையும் தவிர்த்தோம்
Madukkur.com உங்களுக்கும் பிரேம் இன்ஜினியர் அவர்களுக்கும் ஏதாவது வருத்தமா ?
SNA.Buhari: எங்களுக்கும் இன்ஜினியருக்கும் இடையே எவ்வித மனக்கசப்பும் கிடையாது. அவர் தொடர்ந்து அவர் வேலைகளை அவர் கட்டுப்பாட்டில் அவரது இன்ஜினியர் கார்த்திக் நேரடி பார்வையில் செய்து வருகின்றார். நேற்று வரை அவருக்கு பணம் அனுப்பி வருகின்றோம்
ஆனால் இக்காலங்களில் UPVC பயன்படுத்தி வரும் நிலையில் அவர் மரத்தால் மட்டும் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தார். அதனால் சிறிது மனம் வருத்தம் இருந்திருக்கலாம் .மற்றபடி இன்னும் உள்ள வேலைகளை செய்ய யோசனை சொல்லி உள்ளார். அதனை செய்ய சம்மதித்துள்ளார். அவர் உடல்நிலை கருதி வேலை இடங்களுக்கு (சைட்) செல்வதை அவர் குடும்பத்தினர்கள் தடை செய்துள்ளதாக இன்ஜினியர் கார்த்திக் மூலம் அறிய வருகின்றோம்.
Madukkur.com மார்பில் வேலைகள் இன்ஜினை மூலம் நடைபெறுகிறதா?
SNA.Buhari மார்பில் வேலைக்காக இன்ஜினியர் வேறொரு நபரை அறிமுகப்படுத்தினார். அவர் அதனை தான் செய்யாமல் ராஜஸ்தான் பணியாட்களிடம் ஒப்படைத்தார். அவரிடம் கொடுக்கப்பட்ட பணத்தை அவர் ராஜஸ்தான் பணியாட்களிடம் கொடுக்காததால் அவர்கள் தங்களுக்கு நேரில் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அதனால் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் நமக்கு சுமார் ஆறு லட்சம் சேமிப்பானது.
Madukkur.com :பெயிண்டிங் மாற்றம் செய்ததாகவும் அதனால் பணம் விரயம் ஆனதாக ஒரு புரளி!
SNA.Buhari பெயிண்டிங் வேலை அதன் பொருட்களுடன் இன்ஜினியர் வசம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நமது வேண்டுகோளுக்கு இணங்க அவர் முடிவு செய்த கலரை முழு மனத்துடன் இன்ஜினியர் மாற்றிக் கொடுத்தார். இதனால் நமக்கு எதுவும் அதிக செலவே கிடையாது. இது மட்டுமல்ல இது போன்ற புரளிகள் ஏராளம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ள நாம் இதைப் பற்றி கவலை அடைய வேண்டியது இல்லை
Madukkur.com எங்களது இணைதளத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு இணையதளத்தின் சார்பாக நன்றியை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறோம்